» 

ஆஸ்கர் விருதுப் போட்டி-எந்திரன் உள்பட 5 தமிழப் படங்கள் நிராகரிப்பு-மலையாளப் படம் தேர்வு

Posted by:
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க:
        ஷேர் செய்ய         ட்வீட் செய்ய         ஷேர் செய்ய கருத்துக்கள்     மெயில்

Adaminte Makan Abu
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்த முறை மலையாளப் படம் ஒன்று அனுப்பப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற எந்திரன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களும் தேர்வாகவில்லை.

எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன், ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் எந்திரன், தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம், முரண் ஆகிய ஐந்து தமிழ்ப் படங்கள் உள்பட 16 படங்களைப் பரிசீலித்தனர். இறுதியில் மலையாளத்தில் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் தேர்வானது.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்த சலீம் சிறந்த தேசிய நடிகராக தேர்வு பெற்று, தனுஷுடன் சேர்த்து விருதளித்துக் கெளரவிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

Read more about: ஆடுகளம், oscar award, adaminte makan abu, enthiran, எந்திரன், ஆதாமிண்டே மகன் அபு, ஆஸ்கர் விருது
English summary
National award winner Malayalam movie Adaminte Makan Abu has been selected as the Indian movie to compete in Oscar award for Best foreign movie.Enthiran, Kho, Adukalam, Muran, Deiva thirumagal and 10 other movies were rejected
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Tamil Photos

Go to : More Photos