twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள்: 41 சாதனையாளர்களுக்கு விருது

    |

    சென்னை: தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையும் இணைந்து நடத்திய இந்திய சினிமா நூற்றாண்டு விழா நேற்று இனிதே நிறைவு பெற்றது. விழாவில் குடியரசித்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு திரைத்துறையினருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

    இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தன. இந்த விழா கடந்த 21ம் தேதி முதல் நேற்று வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

    நான்குநாள் நடைபெற்ற இந்த விழாவின் சிறிய தொகுப்பு உங்களுக்காக....

    தொடக்கவிழா.....

    தொடக்கவிழா.....

    முதல் நாள் நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தார். திரையுலகில் 50 ஆண்டுகள் சேவை செய்த 56 கலைஞர்களுக்கு அவர் விருதுகளையும் வழங்கினார்.

    இரண்டாம் நாள்....

    இரண்டாம் நாள்....

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், காலை கன்னட பட கலைநிகழ்ச்சிகளும், மாலையில் தெலுங்கு பட கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    மூன்றாம் நாள் விழா....

    மூன்றாம் நாள் விழா....

    மூன்றாம் நாளான கடந்த 23-ந் தேதி மலையாள பட உலகினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    நிறைவுநாள்....

    நிறைவுநாள்....

    நான்காம் நாளும், விழாவின் நிறைவு நாளுமான நேற்று, இந்திய சினிமா நூற்றாண்டின் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    முதல்வருக்கு முதல்விருது....

    முதல்வருக்கு முதல்விருது....

    விழாவில், குடியரசுத் தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இந்திய சினிமாவில் நீண்ட கால சாதனை புரிந்த கலைஞர்களுக்கு ‘நூற்றாண்டு விருது'களை வழங்கினார்.முதல் விருதை, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் வழங்கினார்.

    சாதனை விருதுகள்...

    சாதனை விருதுகள்...

    நீண்ட கால சாதனை புரிந்ததற்காக விருது பெற்ற மற்ற கலைஞர்கள் வருமாறு :இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, இந்தி நடிகை ரேகா, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகை வைஜயந்திமாலா, டைரக்டர் கே.பாலசந்தர், நடிகை அஞ்சலிதேவி, தெலுங்கு டைரக்டர் கே.விஸ்வநாத், டைரக்டர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாபு, டைரக்டர் கே.ராகவேந்திரராவ்,பர்வதம்மா (கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மற்றும் பட தயாரிப்பாளர்).

    மேலும், நடிகை பாரதி விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் அம்பரீஷ், டைரக்டர் ராஜேந்திரசிங் பாபு, துவாரகீஷ் (நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர்), நடிகர் வி.ரவிச்சந்திரன், நடிகர் வீரண்ணா, நடிகர் மது, டைரக்டர் அடூர் கோபாலகிருஷ்ணன், ஸ்டூடியோ அதிபர் சந்திரன் (மெலிலேண்ட் சுப்பிரமணியத்தின் பேரன்),

    பட அதிபர் குஞ்சாகோபோபன், நடிகர் மம்முட்டி, நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்தி பட அதிபர் கிரண் வி.சாந்தாராம், இந்தி நடிகர் ரந்திர்கபூர், இந்தி பட அதிபர் ரமேஷ் சிப்பி, இந்தி பட வினியோகஸ்தர் கமல் பர்ஜாத்யா, தியேட்டர் அதிபர் வினய்குமார் சும்ப்ளே, இந்தி பட பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர், மராட்டிய நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்காள நடிகை அபர்ணாசிங், டைரக்டர் கவுதம் கோஷ், பிரசன்ஜி சாட்டர்ஜி, நரேஷ் கலோடியா, பஞ்சாப் நடிகை பிரீத்தி சப்ரு, ஒரியா நடிகை உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ்தியா, அசாம் நடிகை ஜரிபாவாகின்.

    வரவேற்புரை....

    வரவேற்புரை....

    முன்னதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசினார். விழா முடிவில், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை செயலாளர் ரவி கொட்டாரக்கரா நன்றி கூறினார். அதன்பிறகு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    திரையுலக பிரமுகர்கள்...

    திரையுலக பிரமுகர்கள்...

    விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சிவகுமார், விஜய், அஜீத், கார்த்தி, வெங்கடேஷ், சுதீப், சின்னி ஜெயந்த், நடிகைகள் நயன்தாரா, திரிஷா, பிரியங்கா திரிவேதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

    காட்சித் தொகுப்பு....

    காட்சித் தொகுப்பு....

    விழாவையொட்டி, இந்திய சினிமா பற்றிய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அதில், நடிகர் மாதவன் தோன்றி பேசினார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜ்குமார், சத்யன், பிரேம்நசீர், மது, வைஜயந்திமாலா, பத்மினி ஆகியோர் நடித்த பழைய பட காட்சிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As many as 41 legends of Indian cinema such as Amitabh Bachchan and K. Balachander were felicitated by President Pranab Mukherjee at the centenary celebrations of Indian cinema here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X