twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அமெரிக்கா இசைப்பல்கலைக்கழகம்!

    |

    வாஷிங்டன்: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க இசைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

    மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அப்படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    தற்போது தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லை கடந்து 'ஹாலிவுட்' வரை ஏ.ஆர்.ரகுமானின் புகழ் மணம் வீசி வருகிறது.

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....

    ‘ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் பாடலுக்காகவும், பின்னணி இசைக்காகவும் ஒரே மேடையில் இரண்டு ‘ஆஸ்கார்' விருதுகளை பெற்றவர் ஏ.ஆர். ரஹ்மான்.

    கவுரவ டாக்டர் பட்டம்...

    கவுரவ டாக்டர் பட்டம்...

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

    20 ஆண்டு இசைப்பயணம்...

    20 ஆண்டு இசைப்பயணம்...

    இசை உலகில் 20 ஆண்டு காலம் பங்களித்து வருவதற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    அக்டோபரில் விழா...

    அக்டோபரில் விழா...

    வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் விழாவில் இந்த பட்டம் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது.

    கல்வி உதவித் தொகை...

    கல்வி உதவித் தொகை...

    மேலும், வரும் காலங்களில் இந்தியாவை சேர்ந்த இளைய தலைமுறையினர் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இசை பற்றிய ஆராய்ச்சி செய்ய ஏ.ஆர். ரகுமானின் பெயரில் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இசை நிகழ்ச்சி...

    இசை நிகழ்ச்சி...

    பட்டம் வழங்கும் விழாவின் போது பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான பிரபல பாடல்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    நுழைவுக் கட்டணம்...

    நுழைவுக் கட்டணம்...

    இந்த நிகழ்ச்சியை காண வருபவர்களிடம் வசூல் செய்யப்படும் நுழைவுக் கட்டணம், இந்த கல்வி உதவித் தொகைக்கு பயன் படுத்தப்படும் என பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    English summary
    In recognition of his two-decades-long musical legacy, the prestigious Berklee College of Music is all set to honour Oscar-winning composer A R Rahman with an honorary doctorate.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X