twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''ஆனந்த யாழை மீட்டுகிறாள்.. அவ்வளவு தரம் கெட்ட பாடலா கோபிநாத்?''

    By Mayura Akilan
    |

    சென்னை: தேசிய விருது பெற்ற பாடலுக்கும், தேசிய விருது பெற்ற குழந்தைக்கும் விஜய் டிவி விருது கொடுக்காதா என்று இயக்குநர் ராம் விருது மேடையில் எழுப்பிய கேள்வி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் மூலம் விஜய் விருதுகள் ஒருதலைப்பட்சமாக வழங்கப்படுவதாகவும் ஏராளமானோர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் விருது விழா

    விஜய் விருது விழா

    விஜய் தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் விஜய் அவார்ட்ஸ் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013 ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விருது கடந்த சனிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டது.

    தங்கமீன்கள்

    தங்கமீன்கள்

    விழாவில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் இயக்குனர் ராம்மிடம் தங்கமீன்கள் படம் குறித்து பாராட்டிவிட்டு சில கேள்விகளை கேட்டார்.

    குழந்தைக்கு விருது

    குழந்தைக்கு விருது

    விருதை வாங்கிக்கொண்டு ராம் சில கருத்துக்களை முன்வைத்தார். தங்க மீன்கள் படத்தில் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என அடிக்கடி தனக்கு போன் செய்து கேட்டதாகவும், உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தருகிறார்கள் என்றும் ராம் கூறியுள்ளார்..

    எனக்கு தரமாட்டாங்களா?

    எனக்கு தரமாட்டாங்களா?

    அதற்கு சாதனா, எனக்கு தேசிய விருது கொடுத்திருக்காங்க...... விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா... தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டதாக ராம் கூறினார்.

    ஆனந்த யாழை மீட்டுகிறாள்

    ஆனந்த யாழை மீட்டுகிறாள்

    மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழை' என்ற பாடல் தான். ஆனால் அந்த பாடல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பினார்.

    நிசப்தமான அரங்கம்

    நிசப்தமான அரங்கம்

    அப்போது அரங்கமே ஒரு நிமிடம் நிசப்தமானது. மேலும் அந்த பாடலை ஒரு முறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், "சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்" என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.

    யாராவது பாடுங்களேன்

    யாராவது பாடுங்களேன்

    ஆனால் ராம் "அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?" எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக் கூறினார்.

    யுவனுக்கு கவுரவம்

    யுவனுக்கு கவுரவம்

    எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார்.

    வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்குஇந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.

    சமூக வலைத்தளங்களில்

    சமூக வலைத்தளங்களில்

    இந்நிலையில் இயக்குனர் ராமை போன்று பல ரசிகர்கள் விஜய் அவார்ட்ஸ் விருது ஒரு சார்பாக வழங்கப்படுவதவாக குற்றம்சாட்டி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

    விஜய் வில்லங்க பேச்சு

    விஜய் வில்லங்க பேச்சு

    அதேபோல விழா மேடையில் விஜய்க்கு பேவரைட் ஆக்டர் விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்ற விஜய் ‘தல' கணம் கூடாது என்று பேசியதும் சில சலசலப்புகள் எழுந்தன.

    தல ரசிகர்கள்

    தல ரசிகர்கள்

    சில நிமிடங்களில் அஜீத் நடித்த ஆரம்பம் படம் பேவரைட் படமாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தொடர்ந்து ஆறு நிமிடங்கள் அஜீத் ரசிகர்கள் கைதட்டினார்கள்.

    English summary
    Director Ram delivered the boldest speech of the evening at Vijay Awards on Saturday. He expressed his feeling for the selection of both songs and music director category. Yuvan Shankar Raja’s music for national award-winning Thanga Meengal was widely appreciated by all cinema industry. But, he wasn’t even nominated under the Best Music Composer category in Vijay Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X