»   »  ஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2

ஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2

Posted by:
Subscribe to Oneindia Tamil

சிறந்த படம் - விசாரணை

கடந்த ஆண்டு சிறந்த படத்துக்கான போட்டியில் நான்கு படங்கள் டஃப் ஃபைட் கொடுத்தன. கபாலி, ஜோக்கர், மாவீரன் கிட்டு, விசாரணை.


நான்கு படங்களுமே நல்ல படங்கள்தான். சமூக மாற்றத்துக்காக போராடி வீழும் எளிய மனிதனின் கதை ஜோக்கர், தீண்டாமையை பொட்டில் அடித்து சொன்ன படம் மாவீரன் கிட்டு, ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிய கபாலி என்று மற்ற மூன்று படங்களும் சிறந்த படங்களாக இருந்தாலும் காவல் நிலையத்தின் கொடூர முகத்தை ரத்தமும் சதையுமாக துகிலுரித்து காட்டிய படம் விசாரணை. கபாலி அளவுக்கு பிரம்மாண்டம் இல்லை. ஜோக்கர் அளவுக்கு இயல்பை மீறவில்லை. மாவீரன் கிட்டுவில் இருந்த காதல் கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல் சிஸ்டத்துக்கு எதிரான குரலை ஆழமாக பதிவு செய்தார் வெற்றிமாறன். குறைந்த பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட விசாரணை போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை.


சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (கபாலி)

சமீபகாலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏழு படங்களில் நடித்தார் விஜய் சேதுபதி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேரக்டர்கள். அந்தந்த கேரக்டர்களாகவே தெரிந்த விஜய் சேதுபதி இந்த ஆண்டின் சிறந்த நடிகர்தான்.


ஆனால் ஒரே ஒரு படத்தில் விஜய் சேதுபதி என்ன ஒட்டுமொத்த ஹீரோக்களையே தூக்கிச் சாப்பிட்டார் சூப்பர் ஸ்டார். ரஜினிக்காக எழுதப்பட்ட கதைதான்... ஆனால் ஒரு இடத்தில் கூட ரஜினி தெரியவில்லை. மனைவிக்காக உருகும்போதும், கபாலிடா என்று கர்ஜிக்கும்போதும் சரி ரஜினி நடிப்பில் நீண்ட நாள் கழித்து புது பரிணாமம் எடுத்தார். அந்த வகையில் எங்கள் காளி, ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியை மீட்டுக்கொடுத்த ரஞ்சித்துக்கு நன்றிகள்!


 


சிறந்த நடிகை - வரலெட்சுமி(தாரை தப்பட்டை)

தான் ஒரு பெண் என்பதையே மறக்க வேண்டிய பெர்ஃபார்மென்ஸ் தேவைப்பட்ட கேரக்டர். அசால்ட்டாக செய்துகாட்டிய வரூ அதற்காக எடுத்துக்கொண்ட ஹோம்வொர்க் அபாரம். சூறாவளியாய் சுழன்று அடித்தது படத்தின் தோல்வியால் காணாமல் போனாலும் கூட அந்த கட்டைக் குரலையும் கொலைகுத்து ஆட்டத்தையும் மிஸ் பண்ணவே முடியாது.


 


 


சிறந்த வில்லன் - ஆர்கே.சுரேஷ் (தாரை தப்பட்டை, மருது)

நீண்ட நாள் கழித்து தமிழுக்கு ஒரு புது கிராமத்து வில்லன். கண்களாலேயே கொலைவெறி காட்டி மிரட்டினார். நல்லவனாக நடித்து நய வஞ்சகம் செய்யும் தாரை தப்பட்டை கேரக்டராகட்டும், பழி வாங்கும் உணர்வோடு திரியும் மருது வில்லனாகட்டும் தனது உடல்மொழியால் அருமையாக கொண்டு வந்திருந்தார் ஆர்கே.சுரேஷ்.


சிறந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரகனி (விசாரணை, அப்பா)

'என் கண்ட்ரோல்ல இருக்கற ஸ்டேஷன்ல நீங்க எப்படிங்கய்யா இப்படி பண்ணலாம்?' என்று உயரதிகாரியை கேள்வி கேட்கும்போதும், அப்பாவிகளை உயரதிகாரிகள் ஆணைப்படி கொல்ல வேண்டி வரும்போதும் காட்டும் தயக்கத்திலும் அபார நடிப்பை வெளிபடுத்தினார் சமுத்திரகனி. அப்பாவாக வாழ்ந்து அறிவுரையை கூட எமோஷனல், ஹியூமர் கலந்து சொன்னதும் ஆஸம்!


சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகிபாபு

ரெமோ போன்ற பெரிய பட்ஜெட் ஆகட்டும் மோ போன்ற சின்ன பட்ஜெட் ஆகட்டும் யோகிபாபு தான் காமெடி ஆபத்பாந்தவன். ஸ்க்ரீனில் இவர் தலை தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். இந்த ஆண்டில் நிறைய படங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் யோகிபாபு தான்.


 


 


சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி நைனிகா (தெறி)

தெறியில் விஜய்க்கு நிகராக நாம் ரசித்தது இந்த ஜுனியர் மீனாவைத்தான். ஸ்வீட் அண்ட் க்யூட் பெர்ஃபார்மென்ஸால் நம் மனதை கவர்ந்த நைனிகா அம்மா மனது வைத்தால் ஒரு ரவுண்டு வரலாம்.


 


 


சிறந்த புதுமுக இயக்குநர் - விஜய்குமார் (உறியடி)

படம் எடுக்க தான் பணம், பாப்புலர் நடிகர்கள், பெரிய டெக்னிஷியன்கள் வேண்டும். நல்ல படம் எடுக்க நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தால் போதும் என்பதை நிரூபித்தவர் விஜய்குமார். சாதி அரசியலை மிக வீரியமாக பேசிய உறியடி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ குழந்தை.


சிறந்த புதுமுக நடிகை - ரித்திகா சிங் (இறுதி சுற்று)

க்யூட் என்பதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமா? இறுதிச் சுற்று படத்தில் ரித்திகாவின் நவரச பாவனைகளை பாருங்கள். காதலோ, ஆக்ரோஷமோ, வெறுப்போ, கோபமோ, சோகமோ எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே படத்தில் தன்னை நிரூபித்தார் ரித்திகா. அடுத்த படமான ஆண்டவன் கட்டளையிலும் நிருபர் வேடத்தில் நன்றாக பொருந்தி போனார்.


சிறந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (கபாலி, இறுதிச்சுற்று)

இந்த ஆண்டு முழுக்கவே சந்தோஷ் நாராயணனின் இசை நம் செவிகளை நிரப்பிக்கொண்டிருந்தது. அதில் குறிப்பிட வேண்டியது கபாலியும் இறுதி சுற்றும். நெருப்புடா முதல் மாயநதி வரை கபாலி ஆல்பம் ஃபுல் மீல்ஸை தாண்டி திருப்திப்படுத்த இறுதிசுற்று இன்னொரு வெரைட்டி ஆல்பமாக இருந்தது.


சிறந்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)

இளமை + புதுமையாக அமைந்த துருவங்கள் பதினாறு கூட்டணியின் முதுகெலும்பு. ஒரு சின்ன கதையை த்ரில்லராக்கியதில் சுஜித்தின் கேமரா மிரட்டியது. மழை பெய்கிற ஷாட்டில் இருந்து வீட்டுக்குள் நடக்கும் விசாரணை, காவல் நிலையம் என்று அங்குலம் அங்குலமாக நம்மை கட்டிப் போட்டது சுஜித் கேமரா.


 


 


சிறந்த படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)

பெரிய எடிட்டர்களே பண்ணத் தயங்கும் ஒரு படத்தை மிக அழகாக தொகுத்திருந்தார் ஸ்ரீஜித். ஒரே லொக்கேஷன், ரிப்பீட்டட் ஷாட்கள் என அலுப்பூட்டும் கதையைப் பரபர த்ரில்லராக்கியது ஸ்ரீஜித்தின் கத்தரிக் கோல். வார்ம் வெல்கம் டூ சுஜித் அண்ட் ஸ்ரீஜித் சாரங்ஸ்!


English summary
Here is the second list of Filmibeat awards 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos