»   »  சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது.. ரித்திகாவுக்கு சிறப்பு விருது!

சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது.. ரித்திகாவுக்கு சிறப்பு விருது!

Posted by:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் - நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கிய விசாரணை படத்தில் சமுத்திரக்கனியின் வேடம் பிரதானமாகப் பேசப்பட்டது. இப்போது அந்த நடிப்பு தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

National award for Samuthirakkani, Rithika Singh

விசாரணை படத்துக்கு மேலும் இரு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த பிராந்திய மொழிப் படம் மற்றும் சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதுகள். இந்தப் படத்தின் எடிட்டட் மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத் தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது.

இறுதிச் சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்குக்கு நடுவர்களின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரித்திகா சிங் நிஜமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. அதே வேடத்தை அவர் படத்திலும் செய்தார். அவரது சிறப்பான நடிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

English summary
Director Actor Samuthirakkani has bagged best supporting actor award for his performance in Visaranai and Rithika Singh bags special jury award for Iruthi Sutru.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos