twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது: லண்டனில் பெற்ற ஷாருக்கான்

    By Mayura Akilan
    |

    மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிரிட்டன் அரசு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

    லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர்.

    சினிமா துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. உலகில் சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

    நன்றி சொன்ன ஷாருக்கான்

    நன்றி சொன்ன ஷாருக்கான்

    இவ்விருதை பெற்ற ஷாருக்கான் தனது டிவிட்டரில், பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில் இவ்விருதை பெறுவது எனக்கு பெருமையளிப்பதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் உள்ளதாக கூறினார். அற்புதமான இந்த விழாவில் என்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.

    சர்வதேச விருதுகள்

    சர்வதேச விருதுகள்

    ஷாருக்கானுக்கு பிரான்ஸ், மொராக்கோ நாட்டின் உயரிய விருதுகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்டர்போல் தூதுவர்

    இன்டர்போல் தூதுவர்

    மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் இண்டர்போலின் தூதுவராகவும் ஷாருக்கான் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா

    அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா

    ஏற்கனவே ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Superstar Shah Rukh Khan credited the Indian community based in Britain for Bollywood's popularity and his own success.The 48-year-old actor was in London with his Happy New Year team, including co-stars Deepika Padukone and Abhishek Bachchan as well as director Farah Khan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X