Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குள்ளமான இயக்குனருக்காக ‘கின்னஸ் விருது’ பெறப்போகும் நடிகர் பக்ரு
கொச்சி: மலையாள நடிகரான பக்ரு (எ) அஜய் குமார் முழுநீளப் படத்தில் நடித்த மிகக் குள்ளமான நடிகர் என்ற சாதனைக்காக ஏற்கனவே கின்னஸில் இடம் பிடித்தவர். தற்போது 'குட்டியும் கோலும்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகிலேயே மிகவும் குள்ளமான இயக்குனர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.
தமிழை விட, மலையாளத்தில் மிகவும் பிஸியான காமெடி நடிகரான இவர் தற்போது குட்டியும், கோலும் என்ற முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழில் பக்ரு...
மிகவும் உயரம் குறைவான நடிகரான பக்ரு, ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்தவர்.
குட்டியும், கோலும்...
மலையாளப் படமான ‘குட்டியும் கோலும்' உலகிலேயே மிகவும் உயரம் குறைவாக உள்ள இயக்குனர் பக்ருவால் இயக்கப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்கியதற்காக பக்ரூவுக்கு கின்னஸ் விருது வழங்கப்பட உள்ளது. நவம்பர் 8, 2012ல் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
பிடித்ததைச் செய்கிறேன்...
இது பற்றி பக்ரு கூறும்பொழுது, 'சிரமமான வேலைதான் என்றாலும் மனசுக்குப் பிடித்ததை செய்யும் போது எந்த விதமான கவலை, சோர்வு எதுவும் தெரியாது. இன்னும் வேலை செய்... செய் என்று ஊக்கம் அதிகமாகுமே தவிர குறையாது என்கிறார்.
இமாலயச் சாதனை...
மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய 2 அடி 6 இன்ச் உயரமுள்ள பக்ரு இன்று அடைந்திருப்பதோ கின்னஸ் சாதனையை.