twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்பிபிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... விருது பெற்ற கையோடு உடல்நிலை பாதிப்பு!

    By Shankar
    |

    சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ( International Indian Film Festival of South Africa (IIFFSA).) நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிப் படங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    SP Balasubrahmanyam falls ill in South Africa, after received life time award

    சனிக்கிழமை இரவு ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    உடல் நலக்குறைவு

    விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

    இதையடுத்து அவரை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Singing legend SP Balasubrahmanyam fell ill shortly after receiving the inaugural Lifetime Achievement award at a function here last night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X