twitter
    Celebs»Akshay Kumar»Biography

    அக்‌ஷய் குமார் பயோடேட்டா

    அக்‌ஷய் குமார் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர். இவர் தமிழில் 2019-ஆம் ஆண்டு 2.0 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    பிரபலம்

    1990 காலகட்டங்களில் பாலிவுட் (ஹிந்தி திரையுலகில்) அதிரடி படங்களான கிலாடி (1992),மோஹ்ரா (1994) மற்றும் சப்ஸே படா கிலாடி (1995) ஆகிய படங்களிலும் மற்றும் 'கிலாடி தொடர்வரிசைகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் யே தில்லாகி (1994) மற்றும் டாட்கன் (2000) போன்ற காதல் படங்களிலும், அதேபோல ஏக் ரஸ்தா (2001) போன்ற நாடக படத்திலும் நடித்து தன் திறமையை திரையுலகில் நிரூபித்துக் காட்டினார். 

    அக்‌ஷய் குமார் பிரபல நகைச்சுவைப் படங்களிலும் நடித்துள்ளார். அவரது நகைச்சுவை நடிப்புத்திறனை ஹேரே பேரி (2000), முஜ்ஜேஸே ஷாதி கரோகி ( 2004), கரம் மசாலா (2005) மற்றும் ஜான்-இ-மான் (2006) படங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார்.

    அங்கீகாரம்

    அக்‌ஷய் குமார் தான் நடித்த திரைப்படங்களின் பிரபலத்திற்காகவும், தனது நடிப்பிற்காகவும் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் பிலிம்பேர், சைமா பல விருது அமைப்புகள் கீழ் பல விருதுகளை தன் நடிப்பிற்காக வென்றுள்ளார். இவருக்கு 2008-ல் கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அக்‌ஷய் குமார்க்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அது அவரின் இந்தியத் திரைத்துறைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்குரிய அங்கீகாரமாகும். 2009-ல் அக்‌ஷய் குமார் இந்திய அரசாங்கத்தாரால் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    அக்‌ஷய் குமார் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் என்ற ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தை ஓர் அரசாங்கப் பணியாளர். இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார். அக்‌ஷய் குமார் டெல்லி சாந்தினி சௌக் சுற்றுப் புறத்தில் வளர்ந்தார். அதன்பின்னரே அவர் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கே, அவர் கோலிவாடா அதாவது பஞ்சாபியர்கள் நிறைந்த பகுதியில் குடிபுகுந்தார். அவர் டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார், அங்குதான் அவர் ஜான்பால் சிங்க் உடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.

    பாங்காக்கில் தற்காப்புக் கலைகள் பயின்றுள்ள அக்‌ஷய் குமார், அங்கு ஒரு தலைமைச் சமையல்காரர் ஆகவும் பணிபுரிந்தார். பிறகு மும்பை திரும்பி, தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார், பின்னர் விளம்பரத் தோற்றம் காட்டலிலும் ஈடுபட்டார். இரண்டு மாத விளம்பரத் தோற்றம் காட்டுதலில் ஈடுபட்ட பிறகு, அவருக்கு தயாரிப்பாளர் பிரமோத் சக்ரவர்த்தியின் டீதார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    திருமணம்

    அக்‌ஷய் குமார் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்று மகன் 2002-ல் பிறந்துள்ளான்.