twitter
    Celebs»Amala Akkineni»Biography

    அமலா அக்கினேனி பயோடேட்டா

    அமலா அக்கினேனி இந்திய திரைப்பட நடிகை, பரதநாட்டிய நடனர், விலங்கு பாதுகாப்பு துறையினர் என பல துறைகளில் சிறந்து பணியாற்றிவருபவர். இவர் திரைத்துறையில் மலையாளம், கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தவிர சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பணியாற்றியுள்ளார். 

    பிறப்பு

    அமலா அக்கினேனி கொல்கத்தா நகரத்தில் உள்ள ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம், நடனம் ஆகிய கலைகளில் ஆர்வம் கொண்டு அந்த கலைகளை கற்றுள்ளார். 

    திரையுலக தொடக்கம் / அறிமுகம்

    அமலா அக்கினேனி இயக்குனர், நடிகர் என தமிழ் திரையுலகில் பன்முகம் கொண்டு பணியாற்றிய திரு. டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ள இவர், இதனை தொடர்நது பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

    இவரின் பிரபலத்தை கண்டு இவருக்கு மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து மற்ற மொழிகளிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர்.

    பிரபலம்

    அமலா அக்கினேனி தென்னிந்திய மொழிகளில் அணைத்து முன்னனி நடிகர்களோடு நடித்து பிரபலமானவர். இவர் 1985 முதல் 2000 ஆண்டு வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.

    தொலைக்காட்சி அனுபவம்

    அமலா அக்கினேனி 1991-ம் ஆண்டு டி டி தொலைக்காட்சியில் பெண் என்ற தமிழ் தொடரில் நடித்துள்ள இவர், பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். பின்னர் 2014-2015 ஆண்டில் உயிர் மெய் என்ற தொடரில் ஜீ தொலைக்காட்சியில் நடித்துள்ளார், தற்போது இவர் இணையதள தொடர்களில் நடித்து வருகிறார்.

    அங்கீகாரம்

    அமலா அக்கினேனி-யின் திறனை கண்டறிந்து திரையுலகம் இவருக்கு பிலிம்பேர், சினிமா என பலவிருதுகளை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

    திருமணம்
     
    அமலா 1992-ம் ஆண்டு நடிகர் நாகர்ஜுனா அக்கினியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அக்கினேனி அகில் மற்றும் நாக சைதன்யா என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் தெலுங்கு திரைத்துறையில் நடித்து வருகின்றனர்.