twitter

    அபர்ணா பாலமுரளி பயோடேட்டா

    அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    பிறப்பு

    அபர்ணா பாலமுரளி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர், இவரின் பெற்றோர்களான கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோர் மலையாள திரையுலகில் பணியாற்றி பிரபலமானவர்.

    இவரின் தந்தை கே பி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். இவர் பல மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர்.

    அபர்ணா பாலமுரளி தாய் சோபா பாலமுரளி திருச்சூர், பாலக்காடு மாநிலத்தில் ஒரு பிரபல வழக்கறிஞர் ஆவார். மேலும் இவர் கே பி பாலமுரளி இசையமைத்த சில பாடலுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.

    பிறப்பிலேயே ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்துள்ள இவர், தனது தந்தையின் வழிகாட்டுதல் படி முறையாக இசைக்காற்று பல பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். பின்னர் தனது தாயின் ஆசைப்படி இந்திய பாரம்பரிய நடனங்கள் ஆனா பரதநாட்டியம், மோஹினியாட்டம், குச்சிப்புடி ஆகிய நடனங்களை முறைப்படி கற்றுள்ளார்.

    அபர்ணா பாலமுரளி தமிழில் நடித்துள்ள திரைப்படங்கள் மற்றும் இவரின் புகைப்படங்களுக்கு

    திரையுலக அனுபவம்

    அபர்ணா பாலமுரளி தனது பள்ளி படிப்பினை பாலக்காட்டில் பயின்ற இவர், பின்னர் தனது தந்தை வழிகாட்டுதல் படி சில பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான "யாத்ரா துடருன்னு" என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார்.

    இதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், 2016ல் "மஹேஷிண்டே பிரதிகாரம்" மற்றும் "சண்டே ஹாலிடே" என்னும் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் வாயிலாக மலையாள திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

    மலையாள திரையுலகில் பிரபல நடிகையாகவும், பின்னணி பாடகராகவும் புகழ் பெற்றுள்ள இவர், 2017ம் ஆண்டு தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் விமர்சன ரீதியா தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும்.

    2017, '8 - தோட்டாக்கள்' படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் 2019ம் ஆண்டு "சர்வம் தாள மையம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற இவர், 2020ல் தமிழ் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று" படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.