twitter

    சாந்தினி தமிழரசன் பயோடேட்டா

    சாந்தினி தமிழரசன் தமிழ் திரைப்படத்தில் 2010ம் ஆண்டு நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரையில் நடிப்பதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் பிரபலமான இவர், தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடித்து சின்னத்திரையில் 2019ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்


    சாந்தினி தமிழரசன், சாந்தினி என்ற இயற்பெயரினை கொண்ட இவர், தமிழரசன் மற்றும் பத்மஞ்சலி ஆகியோருக்கு மகளாக 1992ம் ஆண்டு பிறந்தவர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் வளர்ந்து வந்துள்ளார்.

    சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடித்த இவர், 2007ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். தனது 17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் பங்கு பெற்ற இவர், 2009ம் ஆண்டு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.

    இவர் தொகுத்து வந்த ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்கியராஜ் இவருக்கு 'சித்து +2' படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பினை அளித்து வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    சாந்தினியின் புகைப்படங்கள்

    சாந்தினி நடித்த தமிழ் படங்களின் தொகுப்பு

    பிரபலம்

    தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'சித்து +2' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமான இவர், பின்னர் பாடகராகவும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார்.

    தனது முதல் படத்தினை முடித்து இவரது கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் 2013ம் ஆண்டு "நான் ராஜாவாக போகிறேன்" படத்தில் நடித்து தமிழ் திரையில் மீண்டும் அறிமுகமானார். பின்னர் தமிழ் திரையை தொடர்ந்து தெலுங்கு திரையிலும் ஒரு சில படங்கள் நடித்து புகழ் பெற்ற இவர் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து பிரபலமாகியுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்கள் நடித்து புகழ் பெற்ற இவர், 2019ம் ஆண்டு தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தாழம்பூ" என்ற நாடக தொடரில் நடித்து சின்னத்திரையிலும் பிரபலமானார்.