twitter
    Celebs»Cheran»Biography

    சேரன் பயோடேட்டா

    சேரன் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இயக்குனராக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பின்னர் நான்கு தமிழ் நாடு பிலிம்ஸ் விருதுகளும், ஐந்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

    பிறப்பு

    இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் மற்றும் கமலா தம்பதியருக்கு பிறந்துள்ளார். இவரது தந்தை வெள்ளலூர் தியேட்டர் ஒன்றில் ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டராக பணியாற்றியுள்ளார். இவரது தாய் ஆரம்பகால பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.இவர் தனது சிறுவயது காலம் முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டு நாடங்களில் நடித்துள்ளார்.

    திரையுலக அறிமுகம் / தொடக்கம்

    திரையுலக கனவுகளுடன் சென்னைக்கு வந்த இவர்  ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதன் தொடர்பு கொண்டே இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை படங்களுக்கும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    பிரபலம்

    இவர் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படமானது சர்ச்சைகளுடன் மாபெரும் வெற்றியடைந்தது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, போர்க்களம், வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படங்களின் வெற்றியி மூலம் பிரபலமான இவர், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக கண்டறியப்பட்டார்.

    இயக்குனராக இவர் அடைந்த பிரபலத்தை தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படத்திற்கு நடிகராகவும், இயக்குனராகவும் பல விருதுகளை வென்றுள்ளார்.

    அங்கீகாரம் 

    இவர் இந்திய அரசின் தேசிய விருதினை 2000-ஆம் ஆண்டின் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்திற்கும், 2004-ஆம் ஆண்டு "ஆட்டோக்ராப்" திரைப்படத்திற்கும், 2005-ஆம் ஆண்டு "தவமாய் தவமிருந்து" படத்திற்கும், 2005-ம் ஆண்டு "ஆடும் கூத்து" என நான்கு திரைப்படத்திற்கு இயக்குனராக தேசிய விருது பெற்றுள்ளுர்.

    இவர் தமிழக அரசின் திரைப்பட விருதினை 8 முறை சிறந்த திரைப்படம், சிறந்த வசனம் மற்றும் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற பல துறைகளில் விருதுகளை வென்றுள்ளார். பின்னர் பிலிம் பேர் விருதுகளை ஐந்து முறை வென்றுள்ள இவர், திரைப்படங்களை சார்ந்த பல தரப்புகளில் உள்ள பலர் விருதுகளை வென்றுள்ளார்.

    பிக் பாஸ் 

    இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.