twitter
    Celebs»Dhanush»Biography

    தனுஷ் பயோடேட்டா

    தனுஷ், வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி தமிழ் மற்றும் இந்திய சினிமாஎன புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    மிகவும் மெல்லிய உடல் தோற்றம் கொண்டுள்ள இவர், திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் யாரும் எதிர்பார்க்காத வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் தமிழ் திரையில் "இந்தியன் புரூஸ் லீ" என்னும் புனைப்பெயர் கொண்டு அறியப்படுகிறார்.

    ஒரு நடிகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ், தற்போது தயாரிப்பாளராகவும், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தமிழில் இவர் நடித்த "ஆடுகளம்" திரைப்படம் மிக பெரிய அளவில் பிரபலமானது. இப்படத்திற்காக இவர் தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பின்னர் இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் ஜனகரஞ்சகமாக யாரும்  ரசிகர்கள் எதிர்பாக்காத அளவில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றுள்ளார்.



    பிறப்பு

    தனுஷ், தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான "கஸ்தூரி ராஜா" மற்றும் விஜயலக்ஷ்மி என்பவர்களுக்கு மகனாக பிறந்தவர். பிறப்பால் ஒரு திரைக்குடும்பத்தை சேர்ந்துள்ள இவர், பின்னர் இவரது தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து 2002-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

    தனிப்பட்ட வாழ்க்கை

    நடிகர் தனுஷ், தமிழ் இந்திய திரைப்பட பிரபல முன்னணி நடிகர் மற்றும் தமிழ் திரைப்பட "சூப்பர் ஸ்டார்" புகழ் ரஜினிகாந்த் என்பவரின் மூத்த மகளான "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இவர்களது திருமணம் நவம்பர் 18 - 2004ஆம் ஆண்டு சென்னையில் பிரமாண்டமாக நடந்துள்ளது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

    சர்ச்சை

    2016-ஆம் ஆண்டு மதுரை நீதி மன்றத்தில் வடமதுரை சார்ந்த மேலூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் ஜோடி, திரையுலகில் பிரபலமாகி புகழ் பெற்றுள்ள நடிகர் தனுஷ் தங்களின் மகன் என வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூபாய் 65,000 ஜீவன நிதி உதவி தனுஷ் தர வேண்டும் என வழக்கு நடந்தது. ஆனால் இவர்களது மகன் தான் தனுஷ் என இவர்களிடம் போதிய ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கு 2017-ஆம் ஆண்டு மதுரை நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    திரைப்பட தொடக்கம்

    2002-ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் தந்தை மற்றும் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படத்தி நாயகனாக நடித்து தமிழில் திரையில் நடிகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழ் திரையில் பெரிய அளவு கவனத்தை கவர்ந்துள்ளது.

    இப்படத்திற்கு பின்னர் இவரது அண்ணன் இயக்கிய "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றதை தொடர்ந்து இவர் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார்.

    தொடர்ந்து தமிழ் திரையில் பல படங்கள் நடித்து வந்துள்ள இவர், பின்னர் 2007-ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் உடன் கூட்டணி சேர்ந்து "பொல்லாதவன்" திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்திற்கு பின் இவர் "இந்தியன் புரூஸ் லீ தனுஷ்" தமிழ் திரையில் பிரபலமானார்.

    தமிழ் திரையுலகில் நடித்துவந்துள்ள இவர், பின்னர் ஹிந்தி திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் உடன் நடித்து பிரபலமானார். இப்படத்திற்கு பின்னர் அம்பிகாபதி என்ற திரைப்படத்தில் நடித்த தனுஷ், பின் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து உலக அளவில் புகழ் பெற்றுள்ளார்.

    பிரபல திரைப்படங்கள்


    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் பிரபலமானது. பின் இவர் பல புது முக இயக்குனர்களுடன் இணைந்து சுவாரஸ்யமான திரைக்கதையில் இவர் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு முக்கிய படங்களாகவும் பல விருதுகளையும் வென்று தந்துள்ளது.

    ஆங்கீகாரம்

    தனுஷ் தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை தந்து பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமான இவர், பல விருதுகளை வென்றுள்ளார். தேசிய விருது உள்பட விகடன், ஸ்டார் விஜய், எடிசன் மற்றும் பல முன்னிய திரையுலக பல விருது அமைப்பு விருதுகளை வென்று ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.