twitter
    Celebs»Iniya»Biography

    இனியா பயோடேட்டா

    சுருதி சாவந்த் இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

    கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். மேலும் இவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கில குறும்படம் மற்றும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார். 

    மேலும் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார்.  2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. 

    இப்படத்தைத் தொடர்ந்து அருள்நிதியுடன் ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தங்கர்பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைபேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா வாகை சூட வா படத்தில் இனியாவின் நடிப்பைப் பார்த்து வியந்து தான் இயக்கிவரும் திரைப்படமான அன்னக் கொடியும் கொடி வீரனும் என்றப் படத்தில் அமீரிருக்கு சோடியாக நடிக்க கையெழுத்திட்டார். பின்னர் அமீருக்கும், பாரதி ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் அமிர் படத்தில் இருந்து நீக்கப் பட்டார் ஆகையால் இனியாவும் இத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.