twitter
    Celebs»Jyothika»Biography

    ஜோதிகா பயோடேட்டா

    ஜோதிகா சரவணன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதை தவிர இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். இவர் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள திரைப்படமாகிய ஹொவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு நடித்துள்ளார்.

    ஜோதிகா மும்பையில் சந்தர் சாதனா என்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு மகளாக பிறந்தார். நக்மா இவருடைய சகோதரி ஆவார். ஜோதிகா செப்டம்பர் 11-ம் தேதி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.