twitter
    Celebs»K.V. Anand»Biography

    கே.வி. ஆனந்த் பயோடேட்டா

    கே.வி.ஆனந்த் - தமிழ் திரைப்பட இயக்குனர், பத்திரிக்கையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிசெய்துள்ளார், பின்னர் திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக 1990 களில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், கோ போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்களாகும்.



    பிறப்பு

    கே.வி.ஆனந்த் (குமார் வெங்கடேசன் ஆனந்த்) சென்னையில் 1966 - அக்டோபர் 30ல் குமார் வெங்கடேசன் - அனுஷ்யா வெங்கடேசன் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். இவரது சிறுவதியில், கே.வி.ஆனந்த் சென்னையில் உள்ள புலிகேட் என்ற இடத்தில் வளர்த்துள்ளார்.

    1986ஆம் ஆண்டு தனது இளங்கலை பட்டத்தினை டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் 'இயற்பியல்' பாடத்தில் சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் சென்னை லோயலோ கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளார்.

    கே.வி.ஆனந்த் கல்லூரி படிக்கும் காலத்தில் ஹிமாலய மலை போன்ற புகைப்படங்களுக்கு உகந்த இடங்களுக்கு பல முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதிலிருந்து தனது புகைப்படம் எடுக்கும் திறனை அதிகரித்துள்ளார். இந்த புகைப்படம் திறன் காரணமாக புகைப்பட கலைஞராக ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிசெய்துள்ள இவர், இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் அறிமுகத்தில் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகும் வாய்ப்பினை பெற்று தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக பிரபலமானார்.


    கே.வி.ஆனந்த் இயக்கிய புகழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

    2009 - அயன்
    2011 - கோ

    கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரபல தமிழ் திரைப்படங்கள்


    தமிழ் திரைப்பயணம்

    பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய இயக்குனர் கே.வி. ஆனந்த் அதன் பிறகு மலையாள சினிமாவில் 'தென்மாவின் கொம்பத்', மின்னரம்' போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, சினிமாவில் அறிமுகமாகி, மலையாளம், தெலுங்கும் தமிழ், ஹிந்தி என பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானார்.

    ஒளிப்பதிவாளராக சினிமாவில் பணிசெய்து வந்துள்ள இவர், 2005ஆம் ஆண்டு 'கனா கண்டேன்' திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார்.

    தமிழ் சினிமாவில் அயன், கோ என அடுத்தடுத்து வியக்கத்தக்க பல படைப்புகளை கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்த்,பல விருதுகளை வென்று ஒரு முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.

    இறப்பு

    இயக்குனர் கே.வி.ஆனந்த்-ற்கு 29-4-2021 நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது அதனால் தன்னுடைய காரை தானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கே வி ஆனந்த் 30-40-2021 அதிகாலை 3:00 மணி அளவில் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.