Celebs » Karthik Sivakumar » Biography
பயோடேட்டா
கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி,  தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். 

இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். அப்படத்திற்காக  அவர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும்  பராட்டத்தக்க தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றார். அதன் பிறகு, ஆயிரத்தில் ஒருவன் ( 2010 ), பையா (2010), நான் மகான் அல்ல (2010), சிறுத்தை (2011), மற்றும்  மெட்ராஸ் (2014) போன்ற படங்களில் இதுவரை நடித்துள்ளார்.