twitter
    Celebs»Kavya Shetty»Biography

    காவ்யா ஷெட்டி பயோடேட்டா

    காவ்யா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து 2013-ம் ஆண்டு திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு ஷிவானி என்ற தமிழ்/தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், 2015-ம் ஆண்டு இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானவர்.

    கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் பிறந்த இவர், துளுவர் இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மனோகர் ஷெட்டி பொருளாதார ஆசிரியராகவும், தாய் வசந்தி  ஓய்வுபெற்ற வங்கி ஊழியராகவும் பணியாற்றியுள்ளனர். தனது பள்ளிப்படிப்பினை மங்களூரில் பயின்ற இவர், ன்.எம்.ஏ.எம். தொழில்நுட்பக் கல்லூரியில் 2010-ம் ஆண்டில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

    பின்னர் மாடலிங் செய்வதற்கு விருப்பம் கொண்ட இவர், 2011-ம் ஆண்டின் பெங்களூரு அழகு போட்டியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.