twitter
    Celebs»Madhan Karky»Biography

    மதன் கார்க்கி பயோடேட்டா

    மதன் கார்க்கி  ஒரு தமிழ்ப் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.

    லயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்க்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். 

    மெல்லினம் என்பது மதன் கார்க்கி மற்றும் அவரது துணைவியார் நந்தினி கார்க்கி இருவரால் 2008-ஆம் ஆண்டு சேர்ந்து தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் ஐ-பாட்டி எனும் குழந்தைகளுக்கான பாடல்களை கொண்ட நூல் மற்றும் ஒலி குறுந்தகடுகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

     2013-ம் ஆண்டு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்(Karky Research Foundation - KaReFo) என்கிற லாப-நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இது கணியியலில் மொழி குறித்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதையும், மாணவர்களிடையே இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவரும் இவரது மனைவி நந்தினி கார்க்கியும் இதன் அறங்காவலர்களாக இருக்கிறார்கள்.