twitter
    Celebs»Mahesh Manjrekar»Biography

    மகேஷ் மஞ்சுரேகர் பயோடேட்டா

    மகேஷ் மஞ்சுரேகர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1999-ம் ஆண்டு வாஸ்தவ் என்ற ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றி நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அஸ்திதா, குருக்ஷேத்திர என்ற ஹிந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகியுள்ளார்.

    ஹிந்தி திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய இவர், நடிகராகவும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் 2013-ம் ஆண்டு வெளிவந்த ஆரம்பம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு வேலைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்த இவர், 2019-ம் ஆண்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    ஹிந்தி திரையுலகில் இயக்குனராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.