twitter
    Celebs»Mammootty»Biography

    மம்முட்டி பயோடேட்டா

    மம்மூட்டி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இதுவரை 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார். 

    மம்மூட்டி, முஹம்மது குட்டி இஸ்மாயில் என்ற பெயரில் 1951 -ம் ஆண்டு செப்டம்பர் 7 -ல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாந்திரூர் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை இஸ்மாயில், தாயார் பாத்திமா. இவருக்கு இப்ராஹிம் குட்டி, சாக்ரீச் என்ற இரு சகோதரர்களும், அமீனா, சௌதா மற்றும் ஷிபானா என்ற மூன்று சகோதரிகளும் உள்ளனர். 

    மம்மூட்டி கோட்டயத்தில் உள்ள குலசேகரமங்கலம் என்ற இடத்தில் அரசு பள்ளியில் பயின்றார். அவரது தந்தை எர்ணாகுளத்திற்கு தனது குடும்பத்தை அழைத்து சென்றார். அங்குள்ள ஆல்பர்ட் மற்றும் அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த மம்மூட்டி தேவராவில் உள்ள Scared Heart கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, அரசு சட்ட கல்லூரியில் தனது சட்ட படிப்பை முடித்து விட்டு மஞ்சேரியில் இரண்டு வருடங்கள் சட்ட பயிற்சி மேற்கொண்டார். 

    1979 -ல் சுலபாத் என்பவரை மணந்து, சுருமி மற்றும் துல்கர் சல்மான் என்ற குழந்தைகளுக்கு தந்தையானார். இவரின் சகோதரர் இப்ராஹிம் குட்டி மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிகராக பணியாற்றியுள்ளார். அவரின் மகன் மகிபால் சல்மானும் திரைப்பட நடிகராவார். 

    1971 -ம் ஆண்டு மம்மூட்டி தந்து திரைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 

    இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், தொலைக்காட்சிகளையும் நடத்தி வருகிறர்.