twitter
    Celebs»Mani Ratnam»Biography

    மணி ரத்னம் பயோடேட்டா

    மணிரத்னம் இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் ஆவார். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு திரைத்துறையில் பங்களித்து பிரபலமாகியுள்ளார். இவரின் திரையுலக சாதனையை கண்டு இந்திய அரசு இவருக்கு 2002-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

    இவர் திரைக்கதையில் காதல், ரௌடிசம் என தனது படைப்புகளில் வேற்றுமை காற்றியுள்ளார். மேலும் இவரது திரைக்கதை சுருக்கமான வசனங்களில், எதார்த்தமான நடிப்பு, நடுத்தர மக்களின் பின்னணி, மற்றும் எளிய தொழிலநுட்பத்தில் உருவாகும் திரைப்படமாகும்.


    பிறப்பு

    கோபால ரத்தினம் சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர் மணிரத்னம் என்று திரையுலகில் அறியப்படுகிறார். இவர் 1956-ம் ஜூன் 2ல் பிறந்துள்ளார். இவரது தந்தை கோபால ரத்தினம் "வீனஸ் பிக்சர்ஸில்" என்ற திரையுலக திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் விநியோகஸ்தராக பணியாற்றியவர்.

    இவர் தனது பள்ளிப் படிப்பினை சென்னையில் கற்ற பின்னர், தனது இளங்கலைப் பட்டத்தினை சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் பிரிவில் படித்தார். பின்னர் மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலான்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்துள்ளார். இவர் முதுகலைப் பட்டம் முடித்து 1977-ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.

    அறிமுகம் / திரையுலக தொடக்கம்

    இவரது மாமா, அண்ணன், தம்பி என அனைவரும் திரையுலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தரர் என பணியாற்றியுள்ளனர். திரையுலக குடும்பத்தில் பிறந்துள்ள இவர், அறிமுக காலகட்டத்தில் உதவி இயக்குனராக திரையுலகில் பணியாற்றாமலே இயக்குனராக அறிமுகமானவர்.

    இவர் 1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் பாம்பே, திருடா திருடா என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

    இவரது படமான ரோஜா திரைப்படத்திற்காக இவருக்கு பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் இசைப்புயல் என புகழப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்-ஐ திரையுலகிற்குள் தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் ஆவார். இவரின் முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.