twitter
    Celebs»Marimuthu»Biography

    மாரிமுத்து பயோடேட்டா

    மாரிமுத்து - தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் என பல துறையில் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது இயக்கிய புலி வால், கண்ணும் கண்ணும் திரைப்படங்களை தொடர்ந்து நடிகராக இவர் நடித்துள்ள எதிர்நீச்சல் (சீரியல்), ஜெயிலர், விக்ரம் படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு பிரபலமாகியுள்ளார்.

    இறப்பு

    2023 செப் 08ல், 58 வயதில் எதிர் நீச்சல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமானார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மரணம் அவரை அறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.