Celebs » Nataraj » Biography
பயோடேட்டா
நடராஜன் சுப்ரமணியம்  நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 

நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் தமிழ் நாடு, இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார். மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜ் அவர்களே, இந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார்.