twitter
    Celebs»Nikhila Vimal»Biography

    நிகிலா விமல் பயோடேட்டா

    நிகிலா விமல் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை. இவர் மலையாள தொலைக்காட்சியில் 'செயின்ட் அல்போன்ஸ்' என்ற ஒரு குறும்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் வெற்றிவேல், பஞ்சுமிட்டாய் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு

    கேரளா மாநிலத்தில் உள்ள தலிப்பரம்ப என்ற நகரத்தில் 1994-ம் ஆண்டு மார்ச் 9ல் பவித்ரன் மற்றும் கழமண்டலம் விமலாதேவி ஆகியோருக்கு பிறந்தவர். இவரின் தந்தை ஒரு கணக்காளராகவும், தாய் ஒரு நடன ஆசிரியராக இருந்து பணியாற்றியவர்கள். தனது தாயின் உதவில் சிறுவயதில் இருந்து நடனம், பரதம், குச்புடி என பாரம்பரிய நடனக் கலைகளை கற்றறிந்தவர்.



    திரையுலக தொடக்கம்

    இவர் மலையாளத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியான "ஷாலோம் டிவி" தொலைக்காட்சியில் ஒரு "செயின்ட் அல்போன்ஸ்" என்ற ஒரு குறும்படம் ஒன்றில் நடித்து அறிமுகமானவர். 

    2009-ம் ஆண்டு "பாக்கியதேவத" என்ற படத்தில் நடித்து மலையாள வெள்ளித்திரையில் அறிமுகமாகி, பின்னர் 2015-ம் ஆண்டு "24*7" என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிக்க தொடங்கிய இவர், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து திரையுலகில் ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றார்.

    பிரபலம்

    நிகிலா விமல், மலையாள திரைப்படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் 2015-ம் ஆண்டு நடிக்க தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமான இவர், பின்னர் தமிழில் 'பஞ்சுமிட்டாய்' மற்றும் 'வெற்றிவேல்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பிரபலமானது, இப்படத்தில் இடம் பெற்றுள்ள "உன்ன போல ஒருத்தவனா பாத்ததே இல்ல" என்ற திரைப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது. பின்னர் இதே ஜோடி அந்த அந்த ஆண்டு இரண்டாம் பத்தியில் வெளியான "கிடாரி" படத்திலும் இனைந்து புகழ்பெற்றது.

    மலையாள படத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்று பின்னர் தெலுங்கு திரையுலகிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவர் தென்னிந்திய முன்னணி நடிகையாக பணியாற்றி வருகிறார். 

    நிகிலா விமல் மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர், கேரளா அரசினால் பல விருதுகளையும் வென்றுள்ளார். கேரளா அரசு இவருக்கு 2019-ம் ஆண்டு "மோசட் பாப்புலர் அக்ட்ரேஸ்" மற்றும் "பெஸ்ட் ஸ்டார் பேர்" என்ற விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.