twitter
    Celebs»Nivetha Pethuraj»Biography

    நிவேதா பெத்துராஜ் பயோடேட்டா

    நிவேதா பெத்துராஜ் 2016-ம் ஆண்டு "ஒரு நாள் கூத்து" திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு / திரையுலக அறிமுகம்

    நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தூத்துக்குடியில் தனது பள்ளி படிப்பினை பயின்ற இவர், துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் அரேபிய நாடுகளில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்திய பட்டத்தினை வென்றுள்ளார்.

    2016-ம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான இவர், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள "அடியே அழகே" திரைப்பாடலின் பிரபலம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு உதயநிதியின் "பொதுவாக என் மனசு தங்கம்" திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

    தமிழ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றுள்ள இவர், தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் 2017-ம் ஆண்டு மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர், தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்றுள்ளார்.

    நிவேதா பெத்துராஜ் நடித்த திரைப்படங்கள் மற்றும் இவரின் புகைப்படங்களுக்கு