twitter

    சந்தோஷ் நாராயணன் பயோடேட்டா

    சந்தோஷ் நாராயணன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012-ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் இத்திரைப்படத்தினை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II, வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இவர் இசையமைத்த சூது கவ்வும் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர், தனது பள்ளி கல்வியை ஆர்.எஸ்.கே உயர்நிலை பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர் கணிப்பொறிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் ஜே.ஜே கல்லூரியில் பெற்றுள்ளார். தனது கல்வி ஆண்டினை முடித்த பின்னர், ஒலி பதிவு பொறியாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் சுதந்திர இசை நிகழ்ச்சிகளில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் அறிமுகம் கொண்டு தெலுங்கு குறும்படத்தில் இசையமைத்து திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழில் வெளியான அட்டகத்தி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான இவர், இப்படத்தில் இவர் இசையமைத்த காண சார்ந்த பாடல்கள் மூலம் பிரபலமானவர். இத்திரைப்படத்திற்கு பின்பு  சூது கவ்வும் திரைப்படத்தின் பின்னணி இசையும், ஜாலியான லோக்கல் பாடல்கள் மூலம் வெற்றிக்கண்ட இவர் இத்திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்று பிரபலமாகியுள்ளார்.   

    பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இவர் 2019-ம் ஆண்டில் ஜிப்சி திரைப்படத்தில் வெரி வெரி பேட் என்ற பாடலுக்கு இசையமைத்து சர்ச்சை-யில் சிக்கியுள்ளார். இப்பாடலானது ஜனநாயகத்துக்கு எதிரான பாடல் வரிகளை கொண்டு  இயக்கியதால் சர்ச்சையில் சிக்கியது.