twitter
    Celebs»Seeman»Biography

    சீமான் பயோடேட்டா

    சீமான் இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.

    1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 1994-ம் ஆண்டு இயக்குனர் மன்னிவன்னின் அமைதிப்படை, ராசா மகன், பசும்பொன் திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் அமைதிப்படை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

    சீமான் தமிழ் பாதுகாப்பு இயக்க முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அறியப்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கி அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளாராக உள்ளார். ஈழ போராட்டத்துக்காக ஐந்து முறை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.

    சீமான் அவர்கள் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன்,அன்னம்மாள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் திரு.பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் YMCA திடலில் நடைபெற்றது.

    கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன் பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகயும் திகழ்ந்துள்ளார். இவரின் முதல் படமான பிரபு மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராஜை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியை ஏற்றது.

    நீண்ட கால இடைவேளைக்கு பின் மாதவன் பூஜா வடிவேலு போன்றோர்களை கொண்டு இயக்கிய தம்பி படம் பெறும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெறும் இழப்பை சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படம்மற்ற தூயத்தமிழ் வசன நடைக்கொண்டு உருவாகியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் தன் நடிப்பு திறனையும் வெளிக்காட்டியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.