Celebs » Shamili » Biography
பயோடேட்டா
ஷாமிலி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். 1990-ம் ஆண்டில் இவர் நடித்த அஞ்சலி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றவர். 1989-ம் ஆண்டு அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாகவே நடித்த இவர் தற்போது தமிழில் வீர சிவாஜி என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இவர் நடிகை மற்றும் அஜித் குமாரின் மனைவி ஷாலியின் தங்கை ஆவார்.