twitter
    Celebs»Shankar»Biography

    ஷங்கர் பயோடேட்டா

    ஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

    ஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற ஊரில் பிறந்தார். இவர் பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர். பின்பு எஸ் எ சந்திரசேகரிடம் வசன எழுத்தாளராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.

    ஷங்கரின் முதல் படம் ஜென்டில் மேன் ஆகும். இப்படத்தின் ஆக்கச்செலவு 50 மில்லியன் ஆகும். ஷங்கர் என்றாலே மிகப்பெரிய ஆக்கச்செலவு படமாகவே அமையும். 1993-ம் ஆண்டு 50 மில்லியனில் ஆரம்பித்த அவரது பயணம், 2014-ம் ஆண்டு 1.80 பில்லியன் கொண்டு படம் எடுக்கும் அளவிற்கு அவருடைய திறமை உயர்ந்துள்ளது.

    தற்போது ஷங்கர் விக்ரமை கொண்டு ஐ என்ற திரைபடத்தை இயக்குகின்றார். இப்படம் மிகப்பெரிய படமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடைய படமாகவும் இருக்கின்றது.