Celebs » Surya Sivakumar » Biography
பயோடேட்டா
சூர்யா, தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் சரவணன். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதிலும், நடிப்புத் திறனிலும் இவர் புகழ்பெற்றவர். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை காதலித்து, செப்டம்பர் 11, 2006- ல்   மணந்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.

சூர்யா, 1997- ம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது சிங்கம், அஞ்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சூர்யா,  திரைப்படத்தை தவிர, 2006-ல், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்பீஸ்ட், 2010-ம் ஆண்டு, சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் இமாமி நவரத்தினா தயாரிப்புக்காகவும், 2011-ம் ஆண்டு,  க்ளோஸ் அப்,  2012-ல், மலபார் கோல்ட் என்ற நகை குழு அமைப்பிற்காகாவும் விளம்பரங்களில் நடித்தார். 2013 -ம் ஆண்டு, அவருக்கு தென் இந்தியாவின் சிறந்த ஆண் தூதராக தேர்ந்தெடுத்து எடிசன் விருதுகள் ( இந்தியா) வழங்கப்பட்டது .