twitter

    சுஷாந்த் சிங் பயோடேட்டா

    சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்திய திரைப்பட பிரபல நடிகர், நடன மாஸ்டர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் 2008-ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நாடக தொடரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல ஆண்டுகளுக்கு பின் கடின முயற்சி மற்றும் தனது புகழினை கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து ஹிந்தி மற்றும் இந்திய திரையில் பிரபலமாகியுள்ளார்.

    சுஷாந்த் சிங் தமிழில் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான திரைப்படமான M.S. தோனி : The Untold Story என்னும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார். இப்படத்திற்காக இவர் பல விருதுகளையும் வென்று பிரபலமாகியுள்ளார்.

    பிறப்பு

    சுஷாந்த் சிங் பிஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் கிருஷ்ணா குமார் சிங் மற்றும் உஷா சிங் என்பவருக்கு மகனாக பிறந்துள்ளார். இவரின் சகோதரியான மீட்டு சிங் மாநில அளவில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஆவார். இவரின் தாய் 2002-ஆம் ஆண்டு உயிரிழக்க, பின்னர் இவரது குடும்பம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது.

    சுஷாந்த் சிங், பாட்னாவில் தந்து பள்ளி படிப்பினை கற்றறிந்துள்ள இவர், டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் மாடலிங் கலையினை கற்றறிந்துள்ளார். இவர் டெல்லி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்னும் பிரிவில் தனது இளங்கலை படத்தினை வென்றுள்ளார்.

    தனது கல்லூரி காலத்திற்கு பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலிங் துறை சார்ந்து சில விஷயங்களை கற்றறிந்து மாடலிங் துறையில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    திரைப்பட அனுபவம் / பிரபலம்

    சுஷாந்த் சிங் தனது கல்லூரி காலத்தில் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று பல பரிசுகளை வென்றுள்ளார். இவர் தனது கல்லூரி காலத்திற்கு பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ள இவர், பின்னர் தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் பெற்று ஒரு நடிகராக 2008-ஆம் ஆண்டு ஹிந்தி நாடக தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    2008-ஆம் ஆண்டு "கிஸ் தேஷ் மெய்ன் ஹை மேரா தில்" என்னும் நாடக தொடரில் நடிக்க தொடங்கியுள்ள இவர், பின்னர் 2009-ஆம் ஆண்டு "பவித்ரா ரிஷ்ட" , 2010ல் "ஜரா நாசக்கே டிக்க" என பல நாடங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

    இவர் நாடங்களில் நடித்து ஹிந்தி திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுஷாந்த், 2013-ஆம் ஆண்டு "கை போ ச்சே" என்னும் திரைப்படத்தில் நடித்து நடிகராக ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

    பின்னர் பல படங்களில் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து பல ரசிகர்களை கவந்துள்ள இவர், 2016-ஆம் ஆண்டு இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளார். இப்படமானது இந்திய கிரிக்கெட் அணி வீரர் "தோனியின்" வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகும்.

    இறப்பு

    சுஷாந்த் சிங் ராஜ்புட், 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ல் இறந்துள்ளார். இவரின் மரணம் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.