twitter

    வசுந்தரா கஷ்யப் பயோடேட்டா

    வசுந்தரா கஷ்யப் மாடலிங் துறையில் பங்குபெற்று மிஸ்.சென்னை பட்டத்தினை வென்று வெற்றிகண்டுள்ள இவர், இதன் பிரபலத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். கிராமத்து திரைக்கதையினை தொடர்ந்து சிறிய பட்ஜெட் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர்,  இவருக்கென ஒரு அடையாளத்தை தமிழ் திரையுலகில் பதித்துள்ளார்.

    பிரபலம்

    வசுந்தரா கஷ்யப் சென்னை மாடலிங் துறையில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர், இவர் மிஸ்.சென்னை பட்டத்தினை வென்றுள்ளார். இவர் மாடலிங் துறையில் பெற்ற பிரபலத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

    வசுந்தரா கஷ்யப் கிராமத்து திரைக்கதையில் படத்தின் கதை மற்றும் காட்சிகளுக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை, போராளி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.

    திரையுலக தொடக்கம் / அறிமுகம்

    வசுந்தரா கஷ்யப் 2006-ம் ஆண்டு வட்டாரம் திரையாடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இவர் உன்னாலே உன்னாலே, காலைப்பணி, ஜெயம் கொண்டான் திரைப்படங்களில் ஒரு குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

    வசுந்தரா கஷ்யப் 2013-ஆம் ஆண்டு சொன்ன புரியாது, சித்திரையில் நிலாச்சோறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ஒரு இடைவேளைக்கு பின்னர் 2019-ம் ஆண்டு கண்ணே கலைமானே, பக்ரீத் திரைப்படங்களில் நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மீண்டும் தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார்.