twitter
    Celebs»Vijay Antony»Biography

    விஜய் ஆண்டனி பயோடேட்டா

    விஜய் ஆண்டனி இந்திய திரையுலக திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இந்திய தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.

    பிறப்பு
    இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்க்கோவிலில் பிறந்துள்ளார். தனது 7 வயதில் தந்தை-யை இழந்த இவர், இவரின் இளங்கலை பட்டத்தினை சென்னையில் உள்ள லோயலோ கல்லூரியில் பயின்றுள்ளார். 

    திரையுலக அறிமுகம்
    விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்துள்ளார், பின்னர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.இவர் தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார். அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

    இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த முதல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் ஆகும். இதனை தொடர்ந்து இவர் 2006-ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள், 2007-ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை தொடங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    இவர் இசையமைத்த தொலைக்காட்சி நாடக தொடர்களின் பிரபலத்தை தொடர்ந்து இவர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

    பிரபலம்
    இவர் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி ஆத்திசூடி, டைலாமோ, நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2012-ஆம் ஆண்டில் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் தேர்ந்தேடுக்கும் திரைக்கதை முற்றிலும் மாறுபட்ட காரணத்தால் இவர் திரைத்துறையில் இவரின் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கின்றது.

    அங்கீகாரம் 
    2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.