»   »  தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப் போகும் சகலகலா வல்லவன்!

தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப் போகும் சகலகலா வல்லவன்!

உலக நாயகன் தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக பரபரப்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறாராம்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நிலை பாதிப்பு... படம் எதுவும் வெளியாவது போல் இல்லை என்றிருக்கும் சூழ்நிலையில் வருமானத்தை அதிகரிக்க உலக நாயகன் தனியார் டிவிக்கு பரபரப்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக சின்னத்திரை வட்டார பட்சி ஒன்று கூவுகிறது.

பரபரப்பாக தொடங்கிய படம் அவர் படுத்ததால் படுத்து விட்டது. வேறு எந்த படமும் ஒப்புக்கொள்ளமுடியாத அளவிற்கு உடம்பும் ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையில் ஓய்வில் இருந்தாலும் ஓய்விலும் எப்படி வருமானத்தை ஈட்டலாம் என்று யோசித்த உலக நாயகனுக்கு பல கோடி வருமானத்திற்கு வழி கிடைத்து விட்டதாம்.

அதுவும் சாதாரண நிகழ்ச்சியில்லை பிக் பாஸ் போல பிரம்மாண்ட நிகழ்ச்சியாம்... அது குளுகுளுவென நடத்த அவர்தான் சரியான நபர் என்று நினைத்து அணுகியதாம் தொலைக்காட்சி தரப்பு. ஏற்கனவே விளம்பரத்தில் நடித்தவர்தான் என்பதால் அதே பாணியில் இப்போது சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்த வந்த வாய்ப்பையும் விடாமல் பிடித்துக்கொண்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஓய்வுக்குப் பிறகு சின்னத்திரையில் கோடீஸ்வரன் நடத்தி ஹிட் அடித்தார். இன்னமும் சினிமாவில் தனக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல நிறுவனங்களில் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

சுப்ரீம் ஸ்டார் தொடங்கி தெலுங்கு சூப்பர் ஸ்டார் வரை இன்றைக்கு சின்னத்திரையில் கால்பதிக்காதவர்களே கிடையாது. எல்லாம் காசு பணம் துட்டு மணிதான்...
அதே பாணியில் சகலகலா வல்லவன் சின்னத்திரையில் சாதிப்பாரா பார்க்கலாம்.

உலகநாயகன் நடித்தாலும் கோடி உட்கார்ந்தாலும் கோடிதான்.

English summary
Sources said a famous actor host new program in a sattilite channel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos