»   »  'பாடகி' ஆசையால் பணத்தை இழந்த 'பேய்' நடிகை!

'பாடகி' ஆசையால் பணத்தை இழந்த 'பேய்' நடிகை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி ஆசையால் சேமித்த பணத்தையெல்லாம் இழந்து ஆயிரத்தில் ஒருத்தியான நடிகை தவித்து வருவது தான், கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

ஓரளவு பாடத் தெரிந்தாலே இசை ஆல்பம் தயாரித்து வெளியிடுவது நடிகர், நடிகையரின் வழக்கமாக மாறிவருகிறது. இதற்கு அந்த அரண்மனை நடிகையும் தப்பவில்லை.

நடித்துக்கொண்டே பாடல்களைப் பாடி வந்தவருக்கு சொந்தமாக ஆல்பம் தயாரித்து வெளியிட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.

இதனால் சேமித்து வைத்த பணத்தையெல்லாம் போட்டு தானே சொந்தமாகப் பாடி, ஆல்பம் ஒன்றையும் தயாரித்து விட்டார். ஆனால் எப்படியும் விற்று விடலாம் என்றிருந்த நடிகையின் கனவில் மண் விழுந்து விட்டது.

ஒவ்வொரு கம்பெனியாக ஏறி, இறங்கியும் ஆல்பத்தை வாங்க ஆளில்லையாம்.இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை இனிமேல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது என்று சபதமெடுத்திருக்கிறாராம்.

இதனால் தான் சமீப காலமாக நடிக்க வரும் எல்லா வாய்ப்புகளையும் நடிகை ஏற்றுக்கொள்ள காரணம் என்று விவரம் தெரிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர்.

English summary
Sources said Aranmanai fame Actress Lose her Money in Music Album.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos