»   »  நிஜமாவா?.. "ஸ்மால்" நடிகர் மீது "பிக் பிக்" புகார்!

நிஜமாவா?.. "ஸ்மால்" நடிகர் மீது "பிக் பிக்" புகார்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு பெரிய மனிதர்களுக்குள்ளும் சின்னச் சின்ன ஆசை மற்றும் "சின்னத்தமான" ஆசை என்பது நீக்கமற நிறைந்திருக்கும் என்பார்கள். ஆனால் இப்போது இந்த நடிகரின் ஆசையால், இரண்டு பேர் படாதாபடு பட்டுக் கொண்டுள்ளனராம்.

"ஆசை" அதிகம் உள்ளவராம் இந்த நடிகர். ஆசைப்பட்டு விட்டால் அடையாமல் விட மாட்டாராம். விட்டுப் பிடித்தோ அல்லது விட்டுக் கொடுத்தோ... தேவைப்பட்டால் சில பல மிரட்டல்களை விடுத்தோ கூட எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வாராம்.

இவருடன் நடித்த எந்த நடிகையும் "பத்திரமாக" வெளி வந்தது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தற்போது இவருடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகைக்கு இந்த விவரம் எல்லாமல் தெரியாமல் போனதால், படு இயல்பாக இவருடன் பழகியுள்ளார். அதன் பிறகுதான் சிக்கலே ஆரம்பித்ததாம்.

ம்ஹூம்.. இன்னொரு டேக் ப்ளீஸ்!

இப்படம் ஒரு டிராவல் சம்பந்தப்பட்ட படம். ஸோ, டிராவல் காட்சிகள் நிறைய. சமீபத்தில் ஷூட்டிங் நடந்தபோது நடிகர், ஒரு குறிப்பிட்ட காட்சியில் அடிக்கடி டேக் வாங்கியுள்ளார்.

புரியலியே!

ஹீரோயினுக்கு, ஹீரோ சரியாக நடிப்பதாகவே தெரிந்துள்ளது. இருந்தாலும் ஏன் டேக் கேட்கிறார் என்று மட்டும் புரியவில்லை. இருந்தாலும் ஹீரோவே காட்சிக்காக மெனக்கெடும்போது நாம் மட்டும் சும்மா இருக்கலாமோ என்ற நல்லெண்ணத்தில் மீண்டும் மீண்டும் நடித்தார்.

 

 

எனக்குப் புரிஞ்சு போச்!

ஆனால் இயக்குநருக்கு விஷயம் புரி்ந்து விட்டதாம். ஆஹா.. தம்பி பார்முக்கு வந்துட்டாரு.. இனி அடங்க மாட்டாரே என்று தலையைச் சொறிந்து கொண்டு என்ன பண்ணலாம் என்று யோசித்துள்ளார்.

பாதியிலேயே புட்டுக்கிட்டா!

இப்போது தம்பியின் வேகத்துக்கு அணை போட்டால் பாதியிலேயே கோபித்துக் கொண்டு போனாலும் போய் விடுவார். பிறகு அவரை சமாதானப்படுத்துவதும், காளை மாட்டில் பால் கரப்பதும் சமம் என்பதால் குழம்பித் தவித்துள்ளார்.

இன்னிக்கு பூரா ரீடேக்தான்

இப்படியே போனால் இன்று பூராவும் கூட தம்பி ரீடேக் கேட்டாலும் கேட்கலாம். இதை சரி செய்து பிரச்சினையை முடித்தால்தான் நமக்கு காரியம் நடக்கும் என்ற முடிவுக்கு வந்தார் இயக்குநர்.

அடப் பாவியா... அப்படியா சேதி!

இதையடுத்து உரிய முறையில் ஹீரோயின் காதில் மேட்டரைப் போட்டுள்ளனர். அவர் அதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டாராம். முதலில் நோ சான்ஸ்.. ஞான் எங்க ஊருக்கு திரிச்சு போயி என்று கூறியுள்ளார். நீங்க திருச்சி போனாலும் சரி, திருநெல்வேலிக்குப் போனாலும் சரி.. தம்பி விட மாட்டாரம்மா என்று கெஞ்சியுள்ளனர்.

தம்பி ஹேப்பி அண்ணாச்சி

பல்வேறு சமரசங்கள், கெஞ்சல்களுக்குப் பிறகு......... தம்பி ரீடேக் வாங்குவதை நிறுத்தி விட்டு சமத்தாக நடித்துக் கொடுத்தாராம். திட்டமிட்ட காட்சிகளை விட கூடுதலாக சில காட்சிகளையும் முடித்துக் கொடுத்து இயக்குநருக்கு சந்தோஷத்தையும் கொடுத்தாராம்.

ஆனால்..!

அத்தோடு ஒழிந்தது என்று நாயகி நினைத்திருக்க.. இப்போது மீண்டும் மீண்டும் வா என்று பாட்டுப் பாட ஆரம்பித்திருக்கிறாராம் நாயகன். அவரைக் கண்டித்தால் படம் பாதியில் புட்டுக்கும் என்ற அச்சத்தில் இயக்குநரும், இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நாயகியும் குழப்பத்தில் உள்ளனராம்.

English summary
This beautiful actress is strguggling to manage this hero in their latest movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos