»   »  மியாவ் நடிகைக்கும் போய்யா நடிகைக்கும் முட்டிக்கிச்சாமே?

மியாவ் நடிகைக்கும் போய்யா நடிகைக்கும் முட்டிக்கிச்சாமே?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவியில் இருந்து வந்தாலும் வந்த வேகத்திலேயே டாப் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார் அந்த ஹீரோ. காமெடி ஹீரோ என்றாலும் படங்கள் வசூலை குவிப்பதால் இப்போது அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. ஹீரோவுடன் ஜோடி போட ஹீரோயின்களும் ஆசைப்படுகின்றனராம்.

ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து லக்கி ஹீரோயின் என்று பெயரெடுத்த 'மியாவ்' நடிகைக்கும், இப்போது இரண்டு படங்களில் ஜோடி போடும் 'போய்யா' நடிகைக்கும் இடையேதான் போட்டியாம்.

ஹீரோ உடன் யார் ஜோடிபோடுவது. படத்தை யார் கைப்பற்றுவது என்பதில்தான் இப்போது இருவருக்கும் இடையே கோல்டு வார் நடக்கிறது என்று குறி சொல்கிறார் கோடம்பாக்கம் கோவிந்தம்மாள்.

போய்யா நடிகையின் வருகையால் தனக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதாக மியாவ் நடிகை நினைக்கிறாராம். முதல் இரண்டு படங்களில் அந்த ஹீரோ உடன் நடித்த மியாவ் நடிகை, இப்போது ஹீரோ பெண் வேடம் போடும் படத்திலும் ஒரு பாடல் காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் வருந்தி கேட்டுக்கொண்டாராம். நடிகையின் ராசியை உணர்ந்து ஹீரோவும் ஓகே சொல்லி விட்டாராம்.

அந்த ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நினைத்து இப்போது போய்யா நடிகை கோபத்தில் பொங்கிப் போய் இருக்கிறாராம். தமிழ்நாட்டு ஹீரோவை மடக்க அக்கட தேசத்து நாயகியும், அவ்விட தேசத்து நாயகியும் போடும் போட்டிதான் இப்போது ஒரே பேச்சாக உள்ளதாம்.

இப்போது உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பகை ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்று குறி சொல்லுகிறார் கோடம்பாக்கம் கோவிந்தம்மாள்.

English summary
Cold war between two heroines in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos