twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவர் தான் தயாரிக்கணுமா? சங்கத்துக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு குரல்கள்!

    |

    நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் எடுக்கப்பட்டு அதில் வரும் லாபத்தில் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்துதான் தேர்தலில் களம் இறங்கியது தற்போதைய அணி. இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் இளம் ஹீரோக்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

    தேர்தலில் வென்ற பின், ஸ்டார் கிரிக்கெட் நடத்திய பின்னும் கட்டடம் கட்ட போதுமான நிதி கிடைக்காததால் மீண்டும் படம் எடுக்கும் ஐடியாவை கையில் எடுத்துள்ளார்கள். படத்தை இயக்குவது டான்ஸ் மாஸ்டர் இயக்குநர். நடிக்கவிருப்பது சங்க செயலாளரும் பொருளாளரும். படத்தை தயாரிக்கவிருப்பது கல்வி தந்தை தயாரிப்பாளர். இதுதான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

    சங்கம் சார்பிலேயே எடுக்கலாமே? அல்லது இரு நடிகர்களுமே ஃபைனான்ஸ் வாங்கி கூட எடுக்கலாம்... ஏன் அந்த கல்வி தந்தை தயாரிப்பில் படம் எடுக்க வேண்டும்? இருவருக்குமே இப்போது பெரிய மார்க்கெட் இல்லை. எனவே நஷ்டக் கணக்கு காண்பித்தால் கட்டட கனவு என்னவாவது? என்ற ரீதியில் சர்ச்சை கேள்விகளை எழுப்புகிறது எதிரணி.

    இப்படியொரு முடிவு எடுத்ததற்கு சங்க பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ அனுமதி பெறவில்லையாம். ஆக, திரும்பவும் வைப்ரேஷன் மோடுக்கு போயிருக்கு சங்கம்.. நடத்துங்க!

    English summary
    Nadigar Sangam's proposal for producing a movie for the benefit of Sangam building is in trouble due to differences of opinion.There are a lot of controversy in artist union regarding a new film started with secretary and treasure directed by dance master and produced by education father bacuase of producti
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X