»   »  படத்தில் நடிக்க ஒரேயொரு கன்டிஷனை ஸ்ட்ராங்கா போடும் நம்பர் நடிகை

படத்தில் நடிக்க ஒரேயொரு கன்டிஷனை ஸ்ட்ராங்கா போடும் நம்பர் நடிகை

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகை எந்த படத்தையும் ஒப்புக் கொள்ள ஒரேயொரு கன்டிஷனை தான் போடுகிறாராம்.

கோலிவுட், டோலிவுட்டின் வெற்றி நாயகி என்று கொண்டாடப்படுபவர் பெரிய நம்பர் நடிகை. அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகி வருகிறது. ஒன்றிரண்டு மிஸ்ஸானாலும், தொன்னூறு பர்சன்ட் வெற்றி என்பதால் மார்க்கெட்டுக்கு எந்த குந்தகமும் இல்லை.

அடுத்து தெலுங்கில் பெத்த ஹீரோவுடன் நடித்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் நடிகை எந்த பட வாய்ப்பையும் ஒப்புக் கொள்ளும் முன்பு ஒரு கன்டிஷன் போடுகிறாராம்.

அதாவது படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட எந்த ஒரு விழாவிலும் பங்கேற்க மாட்டேன். இஷ்டம்னா படத்தில் நடிக்கிறேன் என்கிறாராம். இந்த கன்டிஷனை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம்.

அம்மணிக்கு ரசிகர்களிடையே மவுசு அதிகம் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரது கன்டிஷனை ஏற்றுக் கொள்கிறார்களாம்.

இத்தனைக்கும் பட புரமோஷன்களில் எப்பேர்ப்பட்ட நடிகையாக இருந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவே இருக்கிறது!

English summary
Number actress has one condition for the producers to accept any movie offers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos