»   »  என்னாது, தீபாவளிக்கு ரிலீஸாகிறதா தளபதி படம்?

என்னாது, தீபாவளிக்கு ரிலீஸாகிறதா தளபதி படம்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி நடிகரின் 60வது படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு தீயாக வேலை செய்து வருகிறார்களாம்.

தளபதி நடிகர் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாரிசு நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் இன்றைய தேதியில் அந்த நடிகைக்கு தான் அதிக கிராக்கியாம்.

நடிகையை தேடி வாய்ப்புகள் வந்து குவிகிறது. இருப்பினும் அவர் தனக்கு ஏற்ற கதையாக தேர்வு செய்து நடிக்கிறார். தளபதி நடிகரின் படம் தீபாவளி ரேஸிலேயே இல்லை.

இந்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தீயாக வேலை நடந்து வருகிறதாம்.

படப்பிடிப்போடு சேர்த்து படத்தொகுப்பு வேலைகளும் நடக்கிறதாம். திடீர் என தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் முடிவு ஏன் என்று தெரியவில்லை. ஏற்கனவே முத்த நாயகன், சுள்ளான், தம்பி நடிகர் ஆகியோரின் படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ளன.

இந்நிலையில் தளபதியும் போட்டியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Thalapathy's 60th movie will join Diwali race.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos