»   »  யார் கூப்பிட்டாலும் எனக்கு ஓகேதான்... !

யார் கூப்பிட்டாலும் எனக்கு ஓகேதான்... !

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ஹீரோயினாக இருந்து சீரியல் ஹீரோயினாக வந்தவர் அந்த இசை நாயகி. சூரிய டிவியில் 5 ஆண்டுகளாக ஒரே சீரியலில் நடித்தவருக்கு அந்த பெயரே நிலைத்துவிட்டது. போகும் இடமெங்கும் ரசிகர்கள் அதே பெயரைச் சொல்லியே அழைத்தனர்.

எதற்கும் இருக்கட்டும் என்று வந்த வாய்ப்பை தவற விடாமல் நட்சத்திர சேனலில் அலுவலக தொடரில் நடித்தார். அதிலும் நல்ல பெயரே கிடைத்தது. சூரிய டிவியில் ஒருவழியாக சீரியலுக்கு என்ட் கார்டு போட்டு விட்டனர்.

இனி அவ்வளவுதான் போல சொந்த ஊருக்கு பெட்டியைக் கட்டலாம் என்று நினைத்தவருக்கு கை மேல் பலனாக ஆங்கில எழுத்து கொண்ட சேனல் மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது. கதை என்னவோ 5 ஹீரோயின் சப்ஜெக்ட்தான் என்றாலும் முக்கிய கதை என்னவோ இவரை சுற்றி வருவதால் ஹேப்பியாகிவிட்டாராம் நாயகி.

சினிமாவில் அக்கா, தங்கை வேடம்தான் கிடைக்கும். அதற்கு சீரியல் கதாநாயகி வாய்ப்பே போதும் என்று எந்த சேனல் அழைத்தாலும் ஒப்புக்கொள்கிறாராம் இசையான நாயகி.

மாடர்ன்... குடும்ப பாங்கினி... அசத்தும் நாயகி

ஒரே நேரத்தில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க யாருக்குத்தான் கசக்கும். சூரிய தொலைக்காட்சியில் தெய்வமான தொடரில் நாயகியாக நடிப்பவருக்கு இப்படித்தான் அடித்துள்ள லக்கி ப்ரைஸ்.

ஏர் ஹோஸ்டஸ் ஆக இருந்து மாடலாக சின்னத்திரைக்குள் நுழைந்தவரை சீரியலுக்கு அழைத்து வந்தவர் அண்ணாமலை இயக்குநர். அதன் மூலம் பிரபல நிறுவனம் தயாரிக்கும் சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இதுவே போகும் இடமெங்கும் அடையாளத்தை தந்தது.

ஒரு சீரியல் மட்டுமே போதும் என்று இருந்த அந்த சத்தியமான நாயகிக்கு மீண்டும் குருநாதர் மூலம் அந்த ஆங்கில எழுத்து சேனலில் நடிக்க வாய்ப்பு வரவே ஒத்துக்கொண்டாராம். மங்களகரமான பெயரில் ஒளிபரப்பாகும் அந்த தொடரின் கதை நாயகியே இவர்தானாம். குடும்ப பாங்கினி கதாபாத்திரமாம்.

சினிமா வாய்ப்புகளை மறுத்துவிட்டு முழு நேர சீரியல் நாயகியாகவே நடிக்க முடிவு செய்துவிட்டாராம் சத்தியமான நாயகி. நகை விளம்பரம், ஹேர் ஆயில் விளம்பரம், ஜவுளிக்கடை விளம்பரம் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்து விட்டாராம் சத்திய நாயகி.

English summary
The heroine is very happy about her serial chances and happily acting in them.
Please Wait while comments are loading...