»   »  இது உலக மகா நடிப்புடா சாமீ, முடியல!

இது உலக மகா நடிப்புடா சாமீ, முடியல!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகர் ஒருவர் முத்தக் காட்சியில் நடிக்க ரொம்ப வெட்கப்பட்டாராம்.

இளம் நடிகர் ஒருவர் நடித்துள்ள புதுப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் அவரும், ஹீரோயினும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

அந்த காட்சிகளில் நடிக்க நம்ம ஹீரோ ரொம்பவே வெட்கப்பட ஹீரோயினோ அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தாராம். ஹீரோ ஏற்கனவே மில்க்குடன் சேர்ந்து நடித்த படத்தில் சூடான முத்தக்காட்சியில் நடித்தவர்.

அப்படி இருக்கும்போது தற்போது மட்டும் வெடக்கப்பட்டார் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படத்தில் ஹீரோயினுடன் நெருக்கமாக இருந்த காட்சிக்கு வேண்டும் என்றே பல டேக்குகள் வாங்கினார்.

ஹீரோ வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் டேக் வாங்குவதை புரிந்து கொண்ட இயக்குனர் ஹீரோயினிடம் சென்று அம்மா, அந்த ஆளு வேண்டும் என்றே பல டேக்குகள் வாங்குகிறார். சூதானமாக இருந்து கொள்ளுங்கள் என்று எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young hero who is known for doing any scenes professionally reportedly hesitated to act in intimate scenes in his upcoming movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos