twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதை மருந்து-என் மகள் மீது வீண் பழி: த்ரிஷாவின் தாயார்!

    By Sudha
    |

    Trisha
    சென்னை: போதை மருந்து விவகாரத்தில் கைதான நபரின் செல்போனில், நடிகை திரிஷாவின் செல்போன் எண் இருப்பதாக கூறப்படுகிறது. இது தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் போதை மருந்து வாங்கும்போது ஹை தராபாத்தில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் விசாரித்ததில் திரையுலகைசட் சேர்ந்த 65 நடிகர் நடிகைகளுக்கு இந்த போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

    நடிகர் உதய்கிரண் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் இந்த கும்பலிடம் தொடர்பில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர் கைதானோர். மேலும் போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய இளைஞர் டைரியில் நடிகை த்ரிஷாவின் செல்போன் எண் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகளை விசாரிக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறும்போது, "போதை மருந்து கும்பலில் தெலுங்கு திரைஉலகில் எல்லோருக்குமே தொடர்பு உள்ளதாக நாங்கள் நினைக்கவில்லை. என்றாலும், சிலருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. அதனால் அவர்களை நாங்கள் விசாரிக்க இருக்கிறோம்" என்றார்.

    இந்த நிலையில், போதை மருந்து வழக்கில் கைதாகி இருக்கும் ஒருவரின் செல்போனில் திரிஷாவின் செல்போன் எண் இருப்பதாக தகவல் வெளியானது. இது, தெலுங்கு படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதைத்தொடர்ந்து திரிஷாவிடம், போலீசார் விசாரணை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.

    இதுபற்றி கொடைக்கானலில் 'மன்மதன் அம்பு' படப்பிடிப்பில் இருந்த திரிஷா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "போதை மருந்து விவகாரத்தில் கைதானவரின் செல்போனில் என் நம்பர் இல்லை. போலீஸ் விசாரணையில் அது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதில் எனக்கு தொடர்பு இருப்பதாக வதந்தியை பரப்புகிறார்கள். இந்த தகவலை பரப்பியவர்களுக்கு நான் வக்கீல் நோட்டீசு அனுப்பியிருக்கிறேன்.

    இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் பேசியிருக்கிறேன். என்னை போலீசார் விசாரிக்க போவதாக சொல்வதில் உண்மை இல்லை. போதை மருந்து விவகாரத்தில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை..." என்றார்.

    வழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா ஆலோசனை!

    இந்த நிலையில், மகள் மீது அவதூறு பரப்பப்படுவதாக, வழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா உமா ஆலோசனை செய்து வருகிறார்.

    இதுகுறித்து உமா கூறுகையில், "போதை மருந்து விவகாரத்தில் என் மகள் திரிஷாவின் பெயர் அனாவசியமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எங்கள் வக்கீலை நான் கலந்து ஆலோசித்து இருக்கிறேன். திரிஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்.

    என் மகளின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து கொண்டுள்ளேன். இந்த வதந்தியை பரப்பிய சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்...", என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X