» 

மு க ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினி வாழ்த்து!

Posted by:

Rajini
தமிழக துணை முதல்வர் முக ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

முக ஸ்டாலின் இன்று 59வது பிறந்த நாள் காணுகிறார். இவருக்கு தமிழகம் மற்றும் டெல்லியிலிருந்து முக்கியத் தலைவர்கள் அதிகாரிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

திரையுலகினர் ஸ்டாலினுக்கு தங்கள் வாழ்த்துக்களை நேரிலும் போனிலும் கூறிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று காலையிலேயே தனது வாழ்த்தை முக ஸ்டாலினுக்கு போனில் தெரிவித்தார். "நீண்ட ஆயுளும் வளமும் வெற்றியும் கிட்டட்டும்" என்று அவர் தனது வாழ்த்தில் தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரும், முக ஸ்டாலினின் உடன்பிறந்த மூத்த சகோதரருமான முக அழகிரியும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் வி சி குகநாதன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சின்னத் திரை சங்கத் தலைவர் குஷ்பு உள்பட திரையுலகப் பிரமுகர்கள் ஸ்டாலினிக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Read more about: பிறந்த நாள் வாழ்த்து, முக ஸ்டாலின், ரஜினி, birthday wishes, m k stalin, rajini
English summary
Super Star Rajinikanth and many other film personalities wished Deputy CM MK Stalin who is celebrating his 59th birthday today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos