» 

மம்தாவுடன் சேரும் மாதவன்

Mamtha Mohandoss with her mother
மாதவனும், மம்தா மோகன்தாஸும் முதல் முறையாக ஜோடி சேருகின்றனர் - செல்வாவின் குரு என் ஆளு படத்திற்காக.

பழம்பெரும் தயாரிப்பாளரான கேஆர்ஜி தயாரிப்பில் உருவாகும் குரு என் ஆளு படத்தை செல்வா இயக்கவுள்ளார். முதல் முறையாக மாதவனும், மம்தா மோகன்தாஸும் இதில் இணைகின்றனர்.

சிவப்பதிகாரம் நாயகியான மம்தா மோகன்தாஸுக்கு தமிழில் சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்குக்குத் தாவினார் மம்தா. இந்த நிலையில் மாதவனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

மாதவன், மம்தா தவிர அப்பாஸ், பிருந்தா பரேக் என 2வது ஜோடியும் படத்தில் இடம் பெறுகிறது. மின்னலே படத்திற்குப் பிறகு மாதவனும், அப்பாஸும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சிவப்பு ரோஜாக்கள், ஜானிஸ கடல் மீன்கள், துடிக்கும் கரங்கள், மின்சாரக் கண்ணா, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் கே.ஆர்.ஜி. 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தயாரிப்புக்குத் திரும்பியுள்ளார்.

இப்படத்தில் காமெடி கலந்த கேங் லீடர் கேரக்டரில் நடிக்கிறாராம் மாதவன். ஷாருக்கானின் எஸ் பாஸ் படம்தான் மாதவனுக்கு முன்னுதாரணமாம்.

படத் தொடக்க விழாவில் மாதவன் பேசுகையில், இயக்குநர் நிஷிகாந்த்துடன் அடுத்து நான் இணையவுள்ள படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகிறது. அதன் பின்னர் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளேன். இடையில் இப்படத்தில் நடிக்கிறேன். செல்வாவின் ஸ்கிரிப்ட் என்னைக் கவர்ந்தது. அதில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

படத்திற்கு காமெடி விவேக். படம் முழுக்க செம ரகளையாக இருக்குமாம். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். செந்தில்குமார் கேமராவை கையாளுகிறார்.

Read more about: சினிமா, தமிழ், மம்தா மோகன்தாஸ், மாதவன், cinema, guru en aalu, madhavan, mamtha mohandas
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos