»   »  அஜீத்-கெளதம் மேனன் கூட்டணில் 'காக்கி'!

அஜீத்-கெளதம் மேனன் கூட்டணில் 'காக்கி'!

Subscribe to Oneindia Tamil
Ajith with Shalini
அஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், "துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன். கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரிடமும் சொல்லியிருக்கிறேன்.

அஜீத் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. போலீஸ் என்றுதான் முதலில் பெயர் சூட்ட நினைத்தோம். அது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல் அல்லது காக்கி ஆகிய தலைப்புகளில் ஒன்றை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் முடிவு செய்யவில்லை என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் காக்கி என்ற பெயரில் சரத்குமார் ஒரு படம் ஆரம்பித்து கால்வாசி ஷூட் செய்த நிலையில் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியில் வெளியான 'அர்த் சத்யா'வை தியாகராஜன் 'காவல்' என்ற பெயரில் படமாக்கினார். அதேபோல 'போலீஸ்' என்ற தலைப்பில் தன் மகன் பிரசாந்தை வைத்து நான்கைந்து வருடங்களாக இயக்கி வருகிறார் அவர்.

எனவே இந்தத் தலைப்புகள் அத்தனை சுலபத்தில் கெளதம்- அஜீத்துக்கு கிடைக்குமா தெரியவில்லை.

ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக காக்கியை உருவாக்குகிறார்களாம்.

கடந்த முறை அசல் படத்தில் இணை இயக்குநராகவும் பொறுப்பேற்றிருந்தார் அஜீத். இந்தப் படத்திலும் அது தொடருமா... கெளதம் மேனன் அனுமதிப்பாரா? பார்க்கலாம்!

Please Wait while comments are loading...