» 

சிங்கம் புலியில் இரட்டை வேடம் போடும் ஜீவா

Jeeva with Anuya
சிவா மனசு சக்தி படத்தின் அமைதியான வெற்றிக்குப் பிறகு, ஜீவா நடிக்கும் படம் சிங்கம் புலி.

சில்வர்லைன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் இந்தப் படத்தின் விசேஷம் ஜீவா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பதுதான். கதாநாயகனும் அவரே வில்லனும் அவரே.

சாய் ரமணி என்பவர் கதை வசனம் எழுதி இயக்குகிறார். சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஜனநாதனிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.

மணிசர்மா இசை அமைக்கிறார். இரட்டை வேடம் என்பதால் கிராபிக்ஸில் தனித்துவம் காட்ட வேண்டும் என்பதற்காக் தேசிய விருது பெற்ற வெங்கியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

இதற்கிடையே ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்பி சௌத்ரி.

மாதத்துக்கு ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்துவந்த ஆர்பி சௌத்ரி சற்று இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது.

Read more about: சிங்கம் புலி, சினிமா, ஜீவா, தமிழ், cinema, jeeva, new film, rb chowdry, singam puli
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos